ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக்கானது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள்.
இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது. இது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்த வீடியோவில் ரஜினி கோட் சூட்டுடன் சக நடிகர்களுடன் நாற்காலியில் அமர்ந்து பேசுவது போல் இருக்கின்றது. முன்னதாக விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்திலிருந்து சில காட்சிகள் இணையத்தில் கசிந்து வரும் நிலையில் ஜெயிலர் திரைப்படம் அதே பிரச்சனை சந்தித்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.