Categories
மாநில செய்திகள்

ரூ.75- க்கு சினிமா டிக்கெட்…. தமிழக ரசிகர்களுக்கு ஷாக்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

சர்வதேச சினிமா தினம் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி கொண்டாடப்பட இருந்த நிலையில் அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள சுமார் 4000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளின் டிக்கெட் கட்டணம் 75 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தினம் செப்டம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சர்வதேச சினிமா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் டிக்கெட் விலை 75 ரூபாய் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் மாநில அரசின் விதிமுறைகளால் தற்போது இந்த சினிமா தினம் தமிழகத்திற்கு செல்லாது என மல்டிபிளக்ஸ் அசோசியேசன் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழக மட்டும் இன்றி தெலுங்கானா,ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் டிக்கெட் விலையில் மாற்றம் இல்லை என குறிப்பிட்டுள்ளது. திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |