Categories
தேசிய செய்திகள்

இழுத்து மூடப்பட்ட 100 வருட வங்கி….. எதற்காக தெரியுமா?… அதிர்ச்சியில் டெபாசிட்தாரர்கள்….!!!!

இந்திய ரிசர்வ் வங்கி புனேயை சேர்ந்த ரூபே கூட்டு வங்கி லிமிட் ரத்து செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 10 ஆம் தேதி வெளியிட்டது. வங்கிக்கு போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மும்பை உயர்நீதிமன்றம் இது குறித்து அளித்து உத்தரவினை வெளியிட்டு 6 வாரங்களுக்கு பிறகு இவை நடைமுறைக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இதனால் 22 ஆம் தேதி நேற்று முதல் ரூபே வங்கி தனது சேவைகளை நிறுத்திக் கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வங்கி மூடப்பட்டதால் அதன் வாடிக்கையாளர்கள் வங்கியில் வைத்திருக்கும் தொகை என்ன ஆகும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் கூட்டுறவு வங்கி அளித்த தகவலின் படி, 99% க்கும் அதிகமான டெபாசிடதாரர்கள், டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷனில் இருந்து தங்கள் வைப்புத் தொகையின் முழு தொகையையும் பெற்றுக்கொள்ளலாம. மே 18, 2022 நிலவரப்படி, DICGC ஏற்கனவே மொத்த காப்பீடு செய்யப்பட்ட டெபாசிட்டுகளில் ரூ.700.44 கோடியை செலுத்தி உள்ளது. இதனையடுத்து இந்த வங்கியில் போதுமான அளவு மூலதனம் இல்லாததாலும், லாபம் சம்பாதிக்க வழிவகை இல்லாதாலும், 1949 வங்கி விதிமுறைகளின்படி செயல்பட்டதாலும், இந்த வங்கியின் உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Categories

Tech |