தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருவார் வெற்றிமாறன். இவர் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கின்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் சூரி மீண்டும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தை மதயானை கூட்டம் பட இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்க உள்ளார். இது தவிர ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள படத்தில் சூரி காமெடி அல்லாமல் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் .தொடர்ந்து காமெடியை தவிர்த்து வரும் சூரி இனிவரும் காலங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் மட்டுமே நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.