சேலம் மாவட்டத்தில் உயர் கல்வி படிப்பதற்காக கல்வி கடன் பெறுவதற்கு மாணவர்கள் எந்த வித தயக்கம் இன்றி தங்கள் வங்கி மேலாளரை அணுகி பயன்பெறலாம். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாணவ, மாணவிகள் படிப்பதற்கு கல்வி கட்டணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் உயர்கல்வியை தொடர கல்வி கடன் முனைப்பு திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலம் கல்வி கடனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில வங்கிகளின் கடன் வழங்குதல் குறித்து வங்கியாளர்கள் மற்றும் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. மேலும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வங்கியாளர்கள் தகுதி உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பதற்கு வங்கிகளின் கல்விக்கடன் உதவி வழங்கிட வேண்டுமென்றும், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுடன் கலந்து உரையாடி வங்கி கடன் குறித்த விழிப்புணர்வை வங்கி அலுவலர்கள் ஏற்படுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து உயர் கல்வி பயில கல்வி கடன் பெறுவதற்கு மாணவ, மாணவிகள் எந்தவித தயக்கமின்றி வங்கி மேலாளர் அணுகி உயர்கல்வி கடனுதவி பெற என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த கல்வி கடன் பெறுவதற்கு உதவிடும் வகையில் பள்ளி கல்வித்துறையின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலரை 9385745857 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.