Categories
மாநில செய்திகள்

சென்னை கபாலீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல பாரம்பரிய உடைக் கட்டுப்பாடு – கோவில் நிர்வாகம் அறிவிப்பு! 

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிளுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பாரம்பரிய உடைக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் அமைந்துள்ளது.  பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சிவன் கோவில் திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது.கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். மேலும் அருகில் ஆடை,  ஆபரண கடைகள், மால் மற்றும் ஏரளமான ஹோட்டல்கள் இருப்பதால் இங்கு ஏராளமான பக்தர்கள் மட்டுமின்று சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருவார்கள். 

சமீபத்தில்  இங்கு வரும் பக்தர்கள் பலர் மாடர்ன் உடைகளில் வருகின்றனர் இது கோவிலின் புனிதத்தை கெடுப்பதாக அமைவதால் ஆலயத்தின் தூய்மையைப் பராமரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்த நிலையில் ஆலய இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பெயரில் ஆடைக்கட்டுப்பாடு அறிவிப்பு குறித்து  அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் ஆண்கள் பாரம்பரியமான வேட்டி சட்டை, முழுக்கால் பேண்ட், சட்டை, ஷர்வாணி ஆகிய பாரம்பரிய உடைகளை உடுத்தி வரவேண்டும். 

கைலி, அரைக்கால் பேண்ட் போன்ற உடைகளை உடுத்தி வரக்கூடாது. பெண்கள் பாரம்பரியமான சேலை, ரவிக்கை, பாவாடை, தாவணி, சுடிதார் துப்பட்டாவுடன் அல்லது பஞ்சாபி உடை அணிந்து வரவேண்டும். டி-ஷர்ட், பனியன், ஸ்கர்ட், மினி ஸ்கர்ட், லெக்கின்ஸ் போன்ற உடைகளை உடுத்தி வரக்கூடாது. துப்பட்டா அணியாமல், குர்தா மேல் சட்டை மட்டும் அணிந்து வரக்கூடாது. கண்டிப்பாக மேல் துப்பட்டா அணிய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |