மறைந்த ராணிக்காக மக்களால் வைக்கப்பட்டிருக்கின்ற மலர் கொத்துகளுக்கு இடையே இருந்த பொருளை கண்டதும் இளவரசர் வில்லியம் உணர்ச்சிவசப்பட்டு மூச்சு திணறியதாக தெரிவித்துள்ளார். வேல்ஸ் இளவரசர் வில்லியம் ராணிக்கு பொதுமக்களின் உணர்ச்சி பூர்வமான அஞ்சலிகளால் மிகவும் நெகிழ்ந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் பூக்களுக்கு மத்தியில் பேட்டிங் டன் கரடி பொம்மைகள் இருந்ததை பார்த்து தான் கண்ணீர் அடக்க முடியாமல் தவிக்க செய்ததாகவும் தனது அமைதியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் திணறி வந்ததாகவும் கூறியுள்ளார். இளவரசர் மற்றும் இளவரசி கேட் திங்கட்கிழமை இறுதி சடங்கை விண்ட்சரில் நடத்த உதவி உதவியாக்களுக்கு நன்றி கூறியுள்ளார். மேலும் அவர்களின் தடையற்ற செயல்பாடு அதை ஒரு அசாதாரண அனுபவமாக மாற்றியது என தெரிவித்துள்ளார். இளவரசரும் இளவரசியும் பெர்ஷியரில் இறுதி சடங்கு நிகழ்வுகளில் பொறுப்புகளை சுமந்து பணியாற்றியவர்கள் அனைவரையும் சந்திக்க ஏற்பாடு செய்தனர்.
அப்போது மறைந்த ராணியின் மரணம் மற்றும் அவரது இறுதி சடங்கின் முடிவிற்கு இடையில் ஓடிய 24 மணி நேர செயல்பாடுகளுக்கு தனிப்பட்ட நன்றியை கூறிய அவர்கள் பலரின் முயற்சிகளுக்கு ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். அப்போது இளவரசர் வில்லியம் இறுதி சடங்கு நிகழ்வுகளுக்கு இடையே தன்னை நெகிழ வைத்த தருணங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது ராணிக்கு மிகவும் பிடித்தமான இந்த பேட்டிங் தன் பொம்மைகள் பற்றி பேசி உள்ளார். மேலும் முடிந்தவரை பல இடங்கள் செய்தி குறிப்புகளை பிடித்ததாகவும் அவற்றில் சில கட்டுரைகள் போல இருந்ததாகவும் அதிலும் குறிப்பாக குழந்தைகள் வைத்த செய்தி குறிப்புகள் நெகிழ வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் செப்டம்பர் எட்டாம் தேதி ராணி இறந்தபின் ஸ்காட்லாந்தில் பால்மோரலுக்கு மேலே வானவில்களை குடும்பத்தினர் பார்த்ததாக தெரிவித்த வில்லியம் அசாதாரண காட்சிகளை தங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என தெரிவித்துள்ளார்.