பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா கேரள மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்திய நிலையில், பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தது. பல்வேறு இடங்களில் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டது. கோழிக்கோடு, வயநாடு, திருவனந்தபுரம், ஆலப்புழா, பந்தளம், கொல்லம், திருச்சூர், கண்ணூர் போன்ற இடங்களில் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டது. கோழிக்கோடு மாவட்டத்தில் 3 இடங்களில் கல்வீச்சு நடைபெற்றது. 2 இடங்களில் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டது.
பெங்களூரு நோக்கிச் சென்ற பேருந்து மீதும், சிவில் நிலையம் அருகே மற்றொரு கேஎஸ்ஆர்டிசி பேருந்து மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. சிவில் நிலையம் அருகில் நடைபெற்ற கல்வீச்சில் கேஎஸ்ஆர்டிசி டிரைவர் ஷஷி காயம் அடைந்தார். கோழிக்கோடு தாமரசேரியில் லாரி மீது கற்கள் வீசப்பட்டது. இதனிடையில் கண்ணூர் உளியிலுள்ள நாராயணபாரா எனும் இடத்தில் வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அத்துடன் செய்தித்தாள் ஏற்றிச்சென்ற வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. மாநில காவல்துறையினர் சட்டஒழுங்கை பாதுகாக்கும் அடிப்படையில், பலத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.