Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பள்ளியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த மாணவ மாணவிகள்…. எதற்காக தெரியுமா?…. பெரும் பரபரப்பு….!!!

விழுப்புரம் அருகில் உள்ள வெங்கந்தூர் கிராமத்தில் அரசு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றியுள்ள பகுதியில் உள்ள மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரை வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த மாத்திரை உட்கொண்ட சில நிமிடங்களில் 30 மாணவ மாணவிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். உடனே ஆம்புலன்ஸ்கள் பள்ளிக்கு வந்தது. அதன்பிறகு மாணவர்களை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |