Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஏற்கனவே 2 முறை திருமணம்” புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாளையம் கிராமத்தில் ரத்தின சீலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். ஏற்கனவே இரண்டு முறை திருமணமான விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் ரத்னசீலனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதால் ரத்னசீலனின் மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த ரத்னசீலன் வீட்டில் இருந்த எலிமருந்தை தண்ணீரில் கலந்து குடித்து வாந்தி எடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரத்னசீலன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |