தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான விஜய்யின் திரை வாழ்க்கையில் பூவே உனக்காக, மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. விக்ரமன் இயக்கிய அந்தப் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. மேலும் துள்ளாத மனமும் துள்ளும், லவ் டுடே, திருப்பாச்சி, ஷாஜகான், ஜில்லா உட்பட விஜய் நடித்த பல்வேறு திரைப்படங்களை ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
94 படங்களை தயாரித்துள்ள சூப்பர் குட் பிலிம்ஸ், தன் 100-வது படத்தை விஜய்யை வைத்து தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இது தொடர்பாக ஆர்.பி.சவுத்ரியின் மகனும், நடிகருமான ஜீவா கூறியிருப்பதாவது “கண்டிப்பாக சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது திரைப்படத்தில் விஜய் நடிப்பார். அண்மையில்கூட விஜய்யுடன் பேசினோம். அவருக்கும் அப்படி ஒரு விருப்பம் உள்ளது. காலம் நிச்சயம் இதை நடத்தி வைக்கும்”. என்று அவர் கூறினார்.