நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்க துறை நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது தமிழகம், கேரளா உள்ளிட்ட 15 மாநிலங்களில் 93 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் முடிவில் ஆயுதங்கள், பணம் டிஜிட்டல் கருவிகள் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சோதனையின் முடிவில் பிஎப்ஐ அமைப்பை சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிலும் கேரளாவில் அதிகபட்சமாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் இன்று முழு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடைபெறும் என்று பிஎப்ஐ அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பிஎப்ஐ சார்பில் முழு அடைப்பு விடுக்கப்பட்ட நிலையில் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டது. தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், குறைவான எண்ணிக்கையை இயங்கியது. அதே நேரத்தில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. இதனையடுத்து என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஎப்ஐ சார்பில் கேரளாவில் பல்வேறு பகுதியில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தின் போது பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. 6 மணிக்கு தொடங்கிய இந்த முழு அடைப்பு போராட்டத்தில் இதுவரை மாநிலத்தின் பல்வேறு பகுதியில் கல் வீச்சு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. அதிலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் கல் விச்சு சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. கண்ணூர் மாவட்டம் நாராணயன்பரா பகுதியில் செய்தித்தாள் கொண்டு சென்ற பைக் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. ஆலப்புழா, கோழிக்காடு, கோட்டயம் போன்ற மாட்டார்கள் அரசு பஸ்கள், லாரி, ஆட்டோ, கார்களின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. சாலையில் சென்ற வாகனங்கள் போராட்டக்காரர்களால் நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களை தொடர்ந்து கேரளாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நிலைமை கட்டுக்குள் கொண்டு வர கூடுதல் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.