மத்திய மற்றும் மாநில அரசு தங்களின் அரசு நிதி ஒதுக்கீட்டின்படி மக்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டங்களை ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது.அதனால் ஏழை எளிய மக்கள் அனைவரும் சிறப்பு மருத்துவ வசதிகளை பெற்று வருகிறார்கள். மேலும் அரசு ஊழியர்களின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் வருடத்திற்கு குறிப்பிட்ட அளவு ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளை இலவசமாக எடுத்துக் கொள்ளவும் அனுமதி உள்ளது. இதனால் மக்கள் பலரும் பயனடைந்து வருகிறார்கள்.
இதனைப் போலவே தற்போது மத்திய அரசின் ஆயுஸ்மான் பாரத் எனப்படும் மருத்துவ காப்பீடு திட்டத்தை ஊழியர் வருங்கால வைப்பு நிதி பயனர்களும் அனுபவிக்க முடியும். அதாவது சாலையோர வியாபாரிகள்,சுமை தூக்குவோர் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட 11 வகையான தொழில் பிரிவில் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் மூலமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெறலாம்.
அதற்கான ஒப்புதலை மத்திய அரசு இந்த மாதம் இறுதிக்குள் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனைப் போலவே ஊழியர்கள் மற்றும் அவரின் குடும்பத்தினர் பயனடையும் விதமாக 7 லட்சம் வரை நிதி உதவி பெற்றுக் கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட பணியாளர் பணி சமயத்தில் உயிரிழந்தால் இந்த தொகையை பெற்றுக் கொள்ள முடியும். அதேசமயம் மருத்துவ காப்பீட்டிலும் EPFOபயனர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் ஐந்து லட்சம் ரூபாய் வரை திடீர் நோய்கள் மட்டுமின்றி நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சைக்கு பெற்றுக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.