தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதத்திற்கு இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அவ்வகையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பாக அங்கு பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.
அந்த வகையில் இந்த வருடம் செப்டம்பர் 26ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் நிறுவனங்களும் பங்கேற்க உள்ளது. எனவே பல்கலைக்கழகத்தில் தற்போது படித்து வரும் மாணவர்கள்,முன்னாள் மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.