Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.அதனால் அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 995 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யாமல் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பல வருடங்களாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், வழக்கமாக இரண்டு வருடங்கள் அரசு கல்லூரிகளில் பணிபுரிந்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

ஆனால் இவர்கள் 9 வருடங்களாக பணியாற்றியும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதற்காக பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு அதற்கான முடிவை எடுக்கவில்லை.இந்நிலையில் தற்போது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 995 பேராசிரியர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு பணிவரன் முறை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழக முழுவதும் கல்லூரிகளில் காலியாக உள்ள நான்காயிரம் உதவி பேராசிரியர்களை நியமிப்பதற்கான டிஆர்பி தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். 955 துணை பேராசிரியர்கள் நிரந்தர பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |