Categories
சினிமா தமிழ் சினிமா

உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டிய நடிகர் விஜய் சேதுபதி…. எதற்காக தெரியுமா…????

தமிழ் திரைப்பட நடிகர் ஆன விஜய் சேதுபதி தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரௌடி தான், சேதுபதி உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலமாக ரசிகர்களிடையே கவரப்பட்டார். இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், விஜய் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளையும் வாங்கி உள்ளார். இவர் தன்னுடைய நடிப்பை எதார்த்தமாக ரசிகர்களுக்கு கொடுப்பதால் வெகுவாக ரசிகர்களால் ஈர்க்கப்படுகிறார்.

இந்நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி தன்னை தாக்கியதாக மகா காந்தி தொடர்ந்த வழக்கில் விஜய் சேதுபதிக்கு சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் சம்மனுக்கு ஆஜராகாத விஜய் சேதுபதி, இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அவதூறு வழக்கை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது.

Categories

Tech |