மீனம் ராசி அன்பர்களே, இன்று உங்களுடைய பேச்சு செயலில் கொஞ்சம் முரண்பாடுகள் ஏற்படலாம். ஆலோசனை நன்மை பெற உதவும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக அமையும். மாணவர்கள் பயிற்சியின் மூலம் சில தேவையான விஷயங்களை பெறமுடியும். இன்று வியாபார நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெண்களுக்கு அனுபவம் பூர்வமாக அறிவைக் கொண்டு எதையும் சாதிப்பீர்கள்.
பெண்களுக்கு இன்றைய நாள் ரொம்ப சிறப்பான நாளாக அமையும். வீண் வாக்குவாதங்களை மட்டும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். அக்கம்பக்கத்தினர் இடம் பேசும் பொழுது கொஞ்சம் நிதானத்தை கடைபிடியுங்கள். கூடுமானவரை இன்று கொடுக்கல், வாங்கல்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். பண பரிவர்த்தனையும் கவனமாகவே நடந்து கொண்டால், எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தப்பித்துக்கொள்ளலாம்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் நீலம் நிறம்