நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் வேதியல் கல்வியை மேம்படுத்தும் திட்டத்திற்கு ஆதரவாக ராயல் சொசைட்டி ஆப் கெமிஸ்ட்ரி அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கழகம் போன்றவை இணைந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் முன்னதாக அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கழகத்தின் 30க்கும் மேற்பட்ட ஆய்வகங்களில் ராயல் சொசைட்டி ஆப் கெமிஸ்ட்ரி நடத்திய பரிசோதனையில் நாடு முழுவதிலும் இருந்து 2000 மாணவர்கள் பங்கேற்றுகின்றனர். அப்போது பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை இலக்காகக் கொண்ட நாடு தழுவிய மேம்படுத்தப்பட்ட திட்டமான ஜிக் யாசா என்னும் திட்டத்தில் இணைந்து பணியாற்ற உறுதியளிக்கும் புரிந்துணர் ஒப்பந்தத்தில் இரண்டு அமைப்புகளும் கையெழுத்திட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Categories