ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்துக்கொண்டு சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சர்சவுன்ப் கிராமத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதி மக்கள் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். மையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தை காணவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கடந்த 21-ஆம் தேதி இரவு ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் பயங்கர ஆயுதத்தால் எந்திரத்தை பெயர்த்து கையோடு எடுத்துச் சென்ற காட்சி பதிவாகியுள்ளது.
மேலும் இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது ஏ.டி.எம். எந்திரத்தை மர்ம நபர்கள் பெயர்த்து சென்றுள்ளனர். அதில் 12 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது. எனவே அந்த மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.