கை மற்றும் கால் கட்டப்பட்ட நிலையில் கிடந்த 15 வயது சிறுவனின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் பகுதியில் நேற்று வாய் மற்றும் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் 15 வயது சிறுவனின் உடல் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த சிறுவனின் சடலத்தை கைப்பற்றினர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை அதே பகுதியில் 20 வயது வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது இவரது வீட்டில் கிடைத்த தற்கொலை கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அதில் சிறுவன் என்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டான். பின் அதை வைத்து என்னை பிளாக்மெயில் செய்து வந்தான் என கூறியிருந்தது. ஆனால் அந்த சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் அருகே மேக்கப் உபகரணமும் இருந்துள்ளது. இதனால் மேக்கப் கலைஞரான அந்த வாலிபர் சிறுவனை கொன்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது. வாலிபரின் தற்கொலை கடிதத்தில் சிறுவன் தன்னுடன் உடல் உறவை ஏற்படுத்தினான் . பின்னர் அதை வைத்து என்னை பிளாக்மெயில் செய்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்தால் மட்டுமே சிறுவனின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என கூறியுள்ளார்.