Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நிர்வாண வீடியோவை வெளியிட்ட காதலன்….. இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் அதிரடி….!!!

இளம் பெண்ணின் நிர்வாண வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட காதலனை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்பாதி கிராமத்தில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தமிழன்(25) என்ற மகன் இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதே பகுதியில் வசிக்கும் 22 வயது இளம்பெண்ணும் முத்தமிழனும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் ஒன்றாக வெளியே சென்ற நேரத்தில் வீடியோ, புகைப்படம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து முத்தமிழனின் நடவடிக்கை சரியில்லாததால் அந்த பெண் காதலை முறித்துக் கொண்டு அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இதனால் கோபமடைந்த முத்தமிழன் இளம்பெண்ணை மிரட்டி செல்போனில் காதலித்தபோது எடுத்துக் கொண்ட நிர்வாண வீடியோவை டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் முத்தமிழனை தட்டிக்கேட்டபோது அவர் இளம்பெண்ணை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முத்தமிழனை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |