இன்றைய பஞ்சாங்கம்
24-09-2022, புரட்டாசி 07, சனிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 03.13 வரை பின்பு அமாவாசை.
பூரம் நட்சத்திரம் பின்இரவு 05.07 வரை பின்பு உத்திரம்.
சித்தயோகம் பின்இரவு 05.07 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 0.
மாத சிவராத்திரி.
சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் – 24.09.2022
மேஷம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பயணங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன்கள் குறையும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்ககூடும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். எதிர்பாராத உதவியால் கடன்கள் விலகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மிதுனம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உறவினர்கள் தேவையறிந்து உதவுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபமுயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை சமாளிக்கலாம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். தெய்வ வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும்.
கன்னி
உங்களின் ராசிக்கு ஆரோக்கிய ரீதியாக உடல் சோர்வும் மந்த நிலையும் ஏற்படும். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட தாமதமாக முடியும். வண்டி, வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். உறவினர்களின் உதவியால் உங்களின் பொருளாதார பிரச்சினைகள் குறையும்.
துலாம்
உங்களின் ராசிக்கு நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வேலையில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். சேமிப்பு உயரும்.
தனுசு
உங்களின் ராசிக்கு வரவை விட செலவுகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பொறுப்புடன் நடந்துக்கொள்வதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிட்டும்.
மகரம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரம் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். முடிந்தவரை பேச்சை குறைப்பது நல்லது.
கும்பம்
உங்களின் ராசிக்கு தொழில் வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.
மீனம்
உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த வேலையையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். இனிய செய்து கிடைக்கப் பெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும்.