சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை ஜானகி தன்னுடைய வீட்டில் கடவுள் தன் கண்முன்னே பால் குடித்ததை பார்த்ததாக கூறிய வீடியோ தற்போது பலரையும் ஆச்சரியத்தில் வியக்க வைத்துள்ளது. இவர் முதல் முறையாக சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் சசிகுமாருக்கும் முறை பெண்ணாக நடித்தவர். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு அதிக அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் சமூக வலைதளத்தில் போட்டோ சூட் நடத்தி கொண்டிருந்தார். இதனையடுத்து சீரியல் பக்கம் தற்போது திரும்பி உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் வாராஹி அம்மனின் தீவிர பக்தையாக மாறிவிட்டதாக நடிகை ஜானகி தேவி கூறியுள்ளார். மேலும், “ஒருமுறை பஞ்சமி அன்று இரவு வீட்டில் வாராஹி அம்மனுக்கு பூஜை செய்தேன். அப்போது என் மகளை அழைத்து சாமிக்கு பாலை கொடுக்க சொன்னேன். ஒரு ஸ்பூன் எடுத்து அவள் கொடுத்த பாலை குழந்தை போல் அம்மன் உறிஞ்சி குடிச்சாங்க. அதை பார்த்ததும் எனக்கு கண்ணீரே வந்துடுச்சு. அதுக்கப்புறம் இனிமே எனக்கு இவங்கதான்னு தோன ஆரம்பிச்சது” என கூறியுள்ளார்.