தென்பெண்ணை ஆற்றில் உபரி நீரேற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் திட்டம் புத்துயிர் பெறுமா என 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள்.
மழைக்காலங்களில் ஆற்றில் ஓடும் உபரி நீரை கம்பைநல்லூர், வெதரம்பட்டி, பெரமாண்டப்பட்டி, நவலை சின்னகவுண்டம்பட்டி, பொம்பட்டி, போளையம்பள்ளி, கோபிநாதம்பட்டி, ராமாபுரம், ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, சென்னம்பட்டி, தாசரஅள்ளி, மொரப்பூர் உள்ளிட்ட ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் 60 ஏரிகளில் நீரேற்றும் குழாய்கள் மூலம் கொண்டு சென்று நிரப்ப வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தார்கள்.
இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சென்ற அதிமுக ஆட்சியில் தென்பெண்ணையாற்றில் உபரி நீரேற்றும் திட்டம் 400 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இது குறித்த எந்த ஒரு தகவலும் இல்லாமல் இருக்கின்றது. இந்த நிலையில் இந்த நீரோட்டம் திட்டத்தை தமிழக அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என 100-க்கும்மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள். மேலும் இது குறித்து பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றார்கள்.