Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நபர்….. மடக்கி பிடித்த அதிகாரிகள்…. விமான நிலையத்தில் பரபரப்பு….!!!

கடந்த 15 ஆண்டுகளாக போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு கத்தாரில் இருந்து வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் திருச்சியை சேர்ந்த ராமலிங்கம்(42) என்பவர் நைஜீரியா நாட்டிலிருந்து கத்தார் வழியாக சென்னைக்கு வந்துள்ளார். இதனை அடுத்து அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது ராமலிங்கம் கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அனைத்து மகளிர் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என்பது தெரிந்தது.

கடந்த 2007-ஆம் ஆண்டு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் ராமலிங்கத்தின் மனைவி இறந்துவிட்டார். இதனால் போலீசார் ராமலிங்கம் மீது வழக்குப்பதிந்து கடந்த 15 ஆண்டுகளாக அவரை தேடி வருகின்றனர். எனவே அதிகாரிகள் ராமலிங்கத்தை பிடித்து தனி அறையில் தங்க வைத்து திட்டக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி திட்டக்குடி போலீசார் அங்கு விரைந்து சென்று ராமலிங்கத்தை கைது செய்தனர்.

Categories

Tech |