Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் வந்த தாயின் 2-வது கணவர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி….!!

தாயின் 2-வது கணவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் பகுதியில் 50 வயது பெண் தனது 13 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணிற்கும், ஷேர் ஆட்டோ ஓட்டுநரான முருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் கணவன் மனைவி போல ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் போது மது போதையில் வரும் முருகன் அடிக்கடி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனை தட்டி கேட்ட சிறுமியின் தாயிடம் முருகன் தகராறு செய்து இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முருகனை கைது செய்தனர்.

Categories

Tech |