Categories
பல்சுவை

“பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்”…. அட்டாகாசமான தள்ளுபடி…. உடனே முந்துங்கள்….!!!!

ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிளிப்கார்ட் பிக்பில்லியன் டேஸ் சேல் விற்பனை துவங்கியுள்ளது. இந்த விற்பனையில் பல்வேறு வகையான பொருட்களில் சரமாரியான சலுகைகள் இருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு எதை எடுப்பது என்ற குழப்பம் வரும் அளவுக்கு ஏகப்பட்ட சலுகைகளும் தள்ளுபடிகளும் கிடைக்கிறது. பிளிப்கார்ட் வழங்கும் பல சலுகைகளை மற்றவர்களைவிட முன்னதாகவே அணுகும் பிளஸ் உறுப்பினர்களுக்கான விற்பனை கடந்த 22 ஆம் தேதி துவங்கியது.

பிளஸ் அல்லாத உறுப்பினர்களுக்கு பிக்பில்லியன் டேஸ் விற்பனை கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது. இந்த விற்பனை 2 வகையான வாடிக்கையாளர்களுக்கும் வரும் 30ஆம் தேதி வரை இருக்கும். பிக்பில்லியன் டேஸ் விற்பனையில் பல மலிவுவிலை, மிட்-ரேஞ் மற்றும் முதன்மை ஸ்மார்ட் போன்கள் நல்ல தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. நேரடி தள்ளுபடிகள் தவிர்த்து, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ்வங்கி கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ப்ளிப்கார்ட் 10 % தள்ளுபடியையும் வழங்குகிறது. அத்துடன் புதிய வாடிக்கையாளர்கள் விற்பனையின்போது பதிவு செய்தால் ரூபாய். 100 தள்ளுபடி கிடைக்கும்.

பல்வேறு வகையான ஸ்மார்ட் போன்களில் இந்த விற்பனையில் பல சலுகைகளானது கிடைக்கிறது.  Poco C31 ஸ்மார்ட் போன் ரூபாய்.5,999 என்ற ஆரம்ப விலையில் வழங்கப்படுகிறது. இது ரூபாய்.7,000க்கு குறைவான விலையில், சிறந்த அம்சங்களைக் கொண்ட மலிவான ஸ்மார்ட் போனாக அமைகிறது. போக்கோ அதன் M4 Pro மற்றும் X4 Pro 5G வகைகளிலும் தள்ளுபடியை வழங்கி இருக்கிறது. ஹைஎண்ட் போனான Poco F4 5G-ன் விற்பனை அதன் அசல் விலையான ரூபாய்.28,999-க்கு பதில் ரூபாய்.23,499-ல் துவங்குகிறது. அத்துடன் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட்கார்டு மற்றும் கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி ரூபாய்.1,500 கூடுதல் தள்ளுபடியும் பெறலாம். ரியல்மி போன்களும் ரூ.4,000 வரையிலான பெரும் தள்ளுபடியுடன் வருகிறது.

 

Categories

Tech |