அரச வாழ்க்கையில் இருந்து அவ்வபோது விலகி இருக்க மன்னர் சார்லசின் மனைவி கமீலா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மகாராணியாரின் மறைவிற்குப்பின் பிரித்தானியாவின் மன்னராக பொறுப்பேற்றுள்ளார் சார்லஸ். இதனை அடுத்து அவரது மனைவி கமீலா queen consort அந்தஸ்தை பொறுப்பேற்றுள்ளார். அதன்படி கிளாரன்ஸ் ஹவுஸில் தம்பதி எளிமையான வாழ்வை வாழ்ந்து வந்த சூழலில் தற்போது பக்கிங்ஹாம் அரண்மனைக்கு இடம் பெயர்கின்றனர். இருப்பினும் கமீலாவிற்கு அங்கு முழு நேரம் தங்கும் எண்ணம் இல்லை அதன்படி ரே மில்க் ஹவுஸ் எனும் அழைக்கப்படும் தனது சொந்த வீட்டை தொடர்ந்து வைத்திருக்க முடிவு செய்திருக்கின்றார்.
இந்த நிலையில் மகாராணி மறைவிற்குப் பின்னரும் ரே மில் ஹவுஸ் வீட்டில் டான் கமிலா வசித்து வந்துள்ளார். அந்த வீட்டை விற்கக் கூடாது எனும் முடிவில் இருக்கும் அவர் அரச வாழ்க்கையிலிருந்து அவ்வபோது விலகி தப்பிக்க அந்த வீட்டைத் தொடர்ந்து பயன்படுத்த இருக்கின்றார். மேலும் கமீலா தனது கணவர் ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸை விவாகரத்து செய்த பின் ஆறு படுக்கையறைகள் கொண்ட அந்த வீட்டை வாங்கி உள்ளார் என்பது தெரிய வந்திருக்கிறது. இதற்கு இடையே கமீலாம் வீட்டை வைத்திருப்பதற்கு நடைமுறை காரணங்கள் இருப்பதாகவும் அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக அவர் சார்லஸை விட அதிக காலம் வாழ்ந்து வந்தததால் வசிக்க நிச்சயம் ஒரு இடம் வேண்டும் என நினைக்கின்றார். மேலும் சொத்தை தனது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.