Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களுக்கு…. மீண்டும் ஒரு வாய்ப்பு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

எஸ்பிஐ-யில் மூத்தகுடிமக்களுக்காகவே செயல்படும் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம் SBI “WECARE”. இத்திட்டம் ஆரம்பத்தில் செப்டம்பர் 2020 வரை மட்டுமே என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா  காரணமாக சிறப்பு FD திட்டமான  இது பலமுறை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் வங்கி சார்பாக இந்த ஸ்பெஷல் பிக்சட்டெபாசிட் திட்டம் அடுத்த வருடம் மார்ச் இறுதிவரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. SBI Wecare டெபாசிட் திட்டம் term deposit பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இவற்றில் 30 bps கூடுதல் பிரீமியம் வழங்கப்படுகிறது. இது மூத்தகுடிமக்களுக்குரிய TDல் செலுத்தப்படும்.

அதேபோன்று சேமிப்பு பணத்துக்கு பிற திட்டங்களை காட்டிலும் அதிகவட்டி வழங்கப்படுகிறது. SBI Wecare டெபாசிட் திட்டம் மார்ச் 31, 2023 வரையிலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது என SBI தன் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்ததிட்டத்தில் மூத்தகுடிமக்களுக்கு 5 வருடங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்திற்கான கூடுதல் 30 bps வட்டி விகிதத்தை வழங்குகிறது. இப்போது SBI பொதுபிரிவினருக்கு 5 ஆண்டு பிக்சட்டெபாசிட்டில் 5.65 சதவீத வட்டி விகிதத்தினை வழங்குகிறது. எனினும் இதில் வட்டி விகிதம் 6.45 சதவீதம் ஆக இருக்கும். இதேபோன்று சென்ற ஆகஸ்ட் மாதம் எஸ்பி வங்கி மற்றொரு பிக்சட் சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. “உத்சவ் டெபாசிட்” எனப்படும் இத்திட்டத்தில் 6.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது 75 தினங்களுக்கான திட்டமாகும். அக்டோபர் 30, 2022 வரை மட்டுமே இது செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |