கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சீரமைப்பு பணியின்போது சாக்கு மூட்டையில் நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தும் வெடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி மாணவி ஸ்ரீமதி மரணமடைந்தார்.. இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் 17ஆம் தேதி வன்முறை ஏற்பட்டு பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக பள்ளியில் மறு சீரமைப்பு செய்யாமல் இருந்து வந்த நிலையில், அந்தப் பள்ளியை மறுசீரமைப்பு செய்து மீண்டும் பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் இந்தப்பள்ளியை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக 10 நாட்களில் ஆய்வு தயார் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த வாரம் இந்த பள்ளியில் மறுசீரமைப்பு செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த பள்ளியில் கலவரத்தின் போது ஏற்பட்ட பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்..
அப்போது சமையலறை பக்கத்தில் உள்ள ஓர் இடத்தை சோதனை செய்தனர். அங்கு பல்வேறு தகவல்கள் கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் விடுதி பகுதியில் சோதனை செய்தபோது ஒரு சாக்கு மூட்டையில் நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய வெடி மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வெடி மருந்து எப்படி வந்தது அந்த வெடி மருந்தை கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் கொண்டு வந்தார்களா? அல்லது கலவரத்தின் போது இது பயன்படுத்தப்பட்டதா? அந்த வெடி மருந்து வருவதற்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தடவியல் நிபுணர்கள் அந்த வெடி மருந்து எப்படி வந்தது? அது எந்த வகையான வெடி மருந்து என ஆய்வு செய்தபின் தான் முழு விவரம் தெரிய வரும்..