Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்கள் யாரும் பதற்றப்பட தேவையில்லை….. கோவை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு….!!!!

கோவை, திண்டுக்கல், சென்னை என பல இடங்களில் பாஜக நிர்வாகிகள், இந்து அமைப்பினர் இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதல் நடைபெற்றதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து 2000க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பெட்ரோல் குண்டு வீச்சு, கார் எரிப்பு சம்பவங்கள் தொடர்பாக காணொலி மூலம்அம்மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கோவை மக்கள் பதற்றப்பட தேவையில்லை .கோவையில் பதற்றத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைதியை நிலைநாட்ட இருதரப்பு அமைப்புகளுடன் நல்லிணக்க பேச்சுவார்த்தை நடத்தினோம். சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவை முழுவதும் 3,500 போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர என்றார்.

Categories

Tech |