நடிகை ஹேமமாலினி உத்தர்பிரதேசம் மாநிலம் மதுரா தொகுதி எம்.பி ஆக இருக்கிறார். அந்த தொகுதியில் போட்டியிட்டு கடந்த 2014 மற்றும் 2019 வருடங்களில் 2 முறை வெற்றிபெற்றவர். அண்மையில் நடிகை கங்கனா ரனாவத் பிருந்தாவன் பகுதியிலுள்ள ஒரு கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். இந்நிலையில் அவரை பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் கூடினர். இருப்பினும் அவர் அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. ஆனால் அரசியலில் கால் பதிக்கும் எண்ணம் இருப்பதாக அவர் பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் நடிகை ஹேமமாலினியின் மதுரா தொகுதியில், அடுத்த தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிட இருக்கிறார் என்ற தகவல் பரவிவருகிறது. இதற்கு எம்.பி ஹேமமாலினி கூறியதாவது, “மதுரா தொகுதியில் திரைத்துறையை சேர்ந்தவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். வேறுயாராவது போட்டியிட்டால் அவர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்ய மாட்டீர்கள். எதிர் காலத்தில் நடிகை ராக்கி சாவந்த் கூட இங்கு போட்டியிட்டு எம்.பி ஆக வரலாம், கடவுளை பொறுத்தது” என்று கூறினார்.