கர்நாடகாவில் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் திடீரென்று மாயமான சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் மற்றும் சித்ரதுர்காவை சேர்ந்த ஒரு மாணவியும் கல்லூரியில் தங்கி படித்து வந்துள்ளார்கள். இதனையடுத்து இவர்கள் தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்த காரணத்தினால் இந்த மூவரும் அதிகாலை மூன்று மணியளவில் கல்லூரி விடுதியின் ஜன்னலை உடைத்து தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும் அவர்கள் தங்கி இருந்த அறையில் கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளனர். இதை கைப்பற்றிய காவல்துறையினர் தாங்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ள காரணத்தினால் பெற்றோர்கள் திட்டுவார்கள் என்று பயந்து போய் சென்று விட்டதாக எழுதியுள்ளனர். பின் கல்லூரி நிர்வாகம் அளித்த புகார் நடைபெற்ற விசாரணையில் மாணவிகள் 3 பேரும் சென்னையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மூன்று மாணவர்களையும் காவல் துறையினர் பெற்றோருக்கு தகவல் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.