Categories
உலக செய்திகள்

குடும்பத்துடன் இணைந்த ராணி இரண்டாம் எலிசபெத்… அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து வெளியான முதல் புகைப்படம்…!!!!!!!

செப்டம்பர் 8-ம் தேதி ஸ்காட்லாந்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான இடமான பால்மோரல் கோட்டையில் உயிரிழந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் ஒரு நாட்கள் கழித்து செப்டம்பர் 19ஆம் தேதி இங்கிலாந்தில் வின்ட்சரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். ராணி இரண்டாம் எலிசபெத் திங்கள் கிழமை அன்று ஒரு தனியார் சேவைக்கு பின் அவரது கணவர் இளவரசர் பிலிப் அருகில் ராணியின் தந்தை ஆரம் ஜார்ஜ், தாய் ராணி எலிசபெத் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தேவாலய சேவைகளுக்காக புனித ஜாஸ் தேவாலயத்திற்குள் கிங் ஜார்ஜ் 4 நினைவு சேப்பலுக்குள் வழிபாட்டாளர்கள் அனுமதிக்கப்பட்ட பின் இந்த பிரத்தியேக படம் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தில் ஒரு கருப்பு நிற மார்பில் பலகையில் அவரது தந்தை ஆறாம் ராணி தாய் எலிசபெத் மற்றும் கடந்த வருடம் இறந்த அவரது மறைந்த கணவர் போன்றோருடன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பது காண முடிகிறது. அதன் அருகில் மூன்றாம் சார்லஸ் மன்னரால் செய்யப்பட்ட மாலை கருங்கல்லுக்கு பக்கவாட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அவர் அடக்கம் செய்யப்பட்ட பின் அந்த இடத்தில் இருந்து வெளியான புகைப்படம் இதுவாகும். வரிசையாக, ஜார்ஜ் VI 1895-1952, எலிசபெத் 1900-2002, எலிசபெத் II 1926-2022, பிலிப் 1921-2021 என்று எழுதப்பட்டுள்ளது.  இரண்டு ஜோடிகளுக்கு இடையே ஒரு ஒற்றை உலோக கார்டர் நட்சத்திரம் அமைந்துள்ளது. இது ஆர்டர் ஆப் தி கார்டரின் சின்னமாகும். இது நாட்டின் மிக பழமையான மற்றும் உன்னதமான வீரத்தின் சின்னமாகவும் முன்னதாக இருந்த பலகையில் ஆறாம் சார் ராணி அம்மாவின் பெயர்கள் மற்றும் இருந்தன.

Categories

Tech |