நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அருகே உள்ள கள்ளிப்பாளையம் என்ற தெருவில் வசித்து வரும் கந்தசாமி என்பவரின் மகன் தனபால் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.இவருக்கும் மதுரையை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் கடந்த ஏழாம் தேதி பரமத்தி வேலூரில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் நடந்த மூன்றாவது நாள் காலையில் புதுப்பெண் சந்தியா திடீரென மாயமானார்.அதன் பிறகு வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதிலிருந்த திருமண பட்டு சேலை மற்றும் நகைகள் அனைத்தும் காணாமல் போனதை கண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் புரோக்கர் பாலமுருகனை தொடர்பு கொண்டு விசாரிக்கலாம் என நினைத்தபோது அவரின் போன் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் சந்தியாவின் அக்கா மற்றும் ராமாயண கூறி வந்தவர்களின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த புது மாப்பிள்ளை தன்னை ஏமாற்றிய கும்பலை பிடிக்க திட்டமிட்டார்.
அதன்படி மதுரை மேலவாசல் ஹவுசிங் போர்டு பகுதியில் இருப்பவருக்கு பெண்பார்ப்பது போல புரோக்கரை வைத்து சந்தியா அவருடன் வந்த கும்பலை போலீசார் உதவியுடன் பிடித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது.அதாவது சந்தியா ஒவ்வொரு திருமணத்தின்போதும் மணமகன் வீட்டில் இருந்து நெருங்கி பழகி நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு மாயமாகி விடுவதை வழக்கமாகக் கொண்டவர்.
இந்த மோசடி சம்பவத்தில் ஒரு கும்பலை ஈடுபட்டு வந்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த இவர்கள் சந்தியாவுக்கு இதுவரை ஆறு பேரை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனிடையே ஏழாவது திருமணத்தின்போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டனர். அதுமட்டுமல்லாமல் தனது குழந்தையை கடத்தி வைத்து புரோக்கர் பாலமுருகன் விரட்டியதால் தான் மோசடி திருமணங்களுக்கு சம்மதித்ததாக அவர் தெரிவித்தார்.