இந்தியாவில் 5g சேவையை தொடங்குவதற்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது.அதில் ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஏலத்தின் பங்கேற்றன. இந்நிலையில் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி முதல் பயிற்சி சேவையை தொடங்க உள்ளதாக ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அம்பானி தெரிவித்திருந்தார்.
தற்போது அக்டோபர் 1ஆம் தேதி சேவை தொடங்க உள்ளதாக சற்றுமுன் புதிய தகவல் வெளியாகி உள்ளது.அதாவது அக்டோபர் 1ஆம் தேதி டெல்லியில் இந்தியா மொபைல் காங்கிரஸ் என்ற மாநாடு நடைபெற உள்ள நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் 5g சேவையை எதிர்நோக்கி பலரும் காத்திருக்கின்றனர்.