ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களை குறிவைத்து புதிய மால் வேர் ஒன்று பரவி வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது. பயனர்களின் வங்கி செயலி போன்ற போலி தோற்றத்தில் இந்த மால்வேர் ஆண்ட்ராய்டு போன்களில் நிறுவி கொள்வதாகவும்,நாம் வங்கி செயலியை பயன்படுத்துவதாக நினைத்து லாகின் தகவல்களை தரும்போது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படுவதாகவும் கூறப்படுகிறது . பாதுகாப்பற்ற இணைய தளங்களுக்கு செல்வதன் மூலம் இந்த மால்வேர் பரவுவதாக கூறப்படுகிறது.இதன் மூலம் ஒருவரின் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் கீ லாக்கிங், குக்கீகளைத் திருடுதல் மற்றும் பல விஷயங்களை செய்ய முடியும்.
இதிலிருந்து தப்பிக்க பிளே ஸ்டோர் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும்போது அவற்றின் மத்திபுரைகள்ஆகியவற்றை மதிப்பாய்வு செய்ய வேண்டும். செயலி கேட்கும் அனைத்து அனுமதிகளையும் நீங்கள் வழங்கக்கூடாது. ஆண்டிராய்டு அப்டேட்டுகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.