இளவரசர் ஹரி- மேகன் தம்பதியின் பிள்ளைகளுக்கு உரிய பட்டங்களை அளிக்க இறுதியில் மன்னர் சார்லஸ் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் ஒரே ஒரு நிபந்தனை வைத்துள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய ராஜகுடும்பத்தில் தற்போது செயற்படாத உறுப்பினர்கள் வரிசையில் இருப்பவர் இளவரசர் ஹரி. இதனால் மன்னருக்கான முக்கிய ஆலோசகர் வட்டத்தில் இருந்தும் அவர் நீக்கப்படும் சூழலில் உள்ளார். இது மட்டுமின்றி, பேரிடியாக அவரது பிள்ளைகள் இருவருக்கும் இளவரசர் மற்றும் இளவரசி பட்டமும் அளிக்கப்படாது என்ற தகவல் அரண்மனை வட்டாரத்திலிருந்து வெளியானது. இதனால் இளவரசர் ஹரி கோபத்தில் இருந்ததாகவும், தமது பிள்ளைகளை ஏன் தண்டிக்கின்றார்கள் என கேள்வி எழுப்பியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது மன்னர் சார்லஸ் இளவரசர் ஹரிக்கு சாதகமான முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் நிபந்தனை ஒன்றையும் முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. மகாராணியாரின் மறைவுக்கு பின்னால் இளவரசர் ஹரியின் பிள்ளைகளும் ராஜகுடும்பத்தின் அடுத்த வரிசைக்கு முன்னேறியுள்ளனர். அதாவது மன்னரின் பேரப்பிள்ளைகள் என்ற அந்தஸ்துக்கு முன்னேறியுள்ளனர். இதனால், மன்னர் சார்லஸ் அவர்களுக்கு இளவரசர் மற்றும் இளவரசி பட்டங்களை அளிக்க முன் வந்துள்ளார்.
இருப்பினும், மன்னரின் முடிவு உத்தியோகப்பூர்வமாக வெளியாகாத நிலையில், ராஜகுடும்பத்தின் உத்தியோகப்பூர்வ இணைய பக்கத்தில் பட்டங்கள் குறிப்பிடப்படவில்லை. மன்னர் சார்லஸின் கூற்றுப்படி, ராஜகுடும்பம் மீது ஹரி நம்பிக்கை வைக்க வேண்டும். இதனிடையே, ஹரி செயல்படும் ராஜகுடும்பத்து உறுப்பினர் இல்லை என்பதால், அவரது பிள்ளைகளுக்கு மன்னர் சார்லஸ் மனமிரங்கி இளவசர பட்டம் அளிக்கலாம் அனால், மதிப்பு மிக்க HRH என்ற அடைமொழி வழங்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகின்றது.