இரண்டு வருடங்களுக்கு பிறகு யஸ்வந்த்பூர், ஓசூர் இடையேயான மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
யஸ்வந்த்பூர்-ஓசூர் இடையேயான மின்சார ரயில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்ற இரண்டு வருடங்களுக்கு மேல் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஓசூரில் இருந்து பெங்களூருக்கு பணிக்கு செல்வோர் வியாபாரிகள் என பலரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இந்த நிலையில் தற்பொழுது கொரோனா தாக்கம் குறைந்திருப்பதால் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள், ரயில்கள் பயணிகள் சங்கத்தினர் சார்பாக கோரிக்கை வைத்து வந்தார்கள். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ரயிலை அலங்கரித்து பூஜைகள் செய்து பட்டாசு வெடித்து ரயில் பயணிகள், சங்க செயலாளர் உமா மகேஸ்வரன், சபரி உள்ளிடோர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மேலும் ரயில் பயணிகளுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.