மூன்றாம் சார்லஸ் தான் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அதனை அதிகாரப்பூர்வமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியா நாட்டின் இளவரசியான இரண்டாம் எலிசபபெத் தனது 96 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக பால்மோரல் அரண்மனையில் கடந்த எட்டாம் தேதி உயிரிழந்தார். இதனால் பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் தனது அரசாங்க பணியை தொடங்கியது தொடர்பாக முதல் புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் பக்கிங்ஹாம் அரண்மனையின் பிரம்மாண்டமான 18- ஆம் நூற்றாண்டின் அறைக்கும் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசர் மூன்றாம் சார்லஸ் தனது அரசாங்க கோப்புகளில் கையொப்பம் இடுவதற்காக தனது பேனாவுடன் இருக்கும் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனையில் ராணி இரண்டாம் எலிசபெத் கிறிஸ்மஸ் செய்தியை பதிவு செய்தார். மேலும் மன்னர் மூன்றாம் சார்லஸ் அருகில் வைக்கப்பட்டிருந்த சிவப்பு பெட்டியிலிருந்து இடது புறமாக உத்தியோகபூர்வ அரசாங்கப் பணிகளை மேற்கொண்ட போது அவருக்கு பின்னால் அவரது பெற்றோர் ராணி எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் புகைப்படம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.