Categories
உலக செய்திகள்

தைவான் பற்றி தவறான கருத்துக்கள்….. ஆபத்தான பிரச்சனைகள் அனுப்பபடுகின்றது…. பிரபல நாட்டை எச்சரித்த சீனா…..!!

தைவான் நிலையை குறித்து அமெரிக்கா தவறான மற்றும் ஆபத்தான பிரச்சனைகளை தெரிவித்து வருவதாக சீனா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தீவு நாடான தைவானை சீனா தங்கள் சொந்த பிரதேசம் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் தைவான் தலைநகர் தைபே-விற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தைவான் கடல் பகுதிக்கு அருகில் சீன கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. சீனாவின் இந்த போர் பயிற்சிகளை அத்துமீறிய மற்றும் சர்வதேச விதிக்களுக்கு எதிரான நடைமுறை என அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் விமர்சித்து வருகின்றது. மேலும் சமீபத்தில் தைவான் ஜலசந்தி முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனின் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிளிங்கன் வெள்ளியன்று நியூயார்க்கில் தனது சீனப் பிரதிநிதி வாங்-யை சந்தித்து, உக்ரைன் போரில் ரஷ்யாவை ஆதரிப்பதற்கு எதிராக பெய்ஜிங்கை எச்சரித்துள்ளார். இந்நிலையில், தைவானின் நிலைமை குறித்து அமெரிக்கா “மிகவும் தவறான மற்றும் ஆபத்தான சமிக்ஞைகளை அனுப்புகின்றது” என சீனா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறியதாவது, “அமைச்சகம் மேற்காட்டிய தகவலில், தைவான் பிரச்சனை என்பது சீன உள்விவகாரம், அதைத் தீர்க்க எந்த முறையைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அமெரிக்கா தலையிட உரிமை இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |