Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆம்பளையா இருந்தா நேருக்கு நேர் வாடா….! அஞ்சுபவன் நான் அல்ல…! தெறிக்கவிட்ட சி.வி. சண்முகம்…!!!!

என்னை மிரட்டலாம், உருட்டலாம் ஆனால் அசைக்கலாம் என்று மட்டும் நினைக்க வேண்டாம் என சி.வி.சண்முகம் கூறியுள்ளார். விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஆரம்பத்தில் இந்தியாவில் இருந்தவர்கள் அனைவருமே இந்துக்கள் தான். அப்படி இருக்கும் போது தவறாக ஆ.ராசா பேசி உள்ளார். இந்துக்கள் பற்றி தவறாக பேசும் ஆ.ராசாவுக்கு இந்துக்கள் ஓட்டு மட்டும் இனிக்கிறதா? என்றார். அப்போது, மேடைக்கு பின் இருந்து சில திமுகவினர் ஆவேச குரல் எழுப்ப, திமுக மிரட்டலுக்கு அஞ்சுபவன் நான் அல்ல. ஆம்பளையா இருந்தா நேருக்கு நேர் வாடா பார்ப்போம் என்று ஆவேசத்தின் உச்சத்திற்கு சென்று விட்டார்.

இப்படி சவாலை தெறிக்கவிட்டு சி.வி. சண்முகம் பேச மேடையின் பின்புறத்தில் நின்று பேசியவர்கள் ஓடி விட்டனர். காவல்துறையினரும் நேர்மை, நியாயத்துடன் இருக்க வேண்டும். ஆட்சி மாறும்போது தெரியும் என்று பேச்சு திசை மாறி உச்சத்தில் செல்லவே அந்த பொதுக்கூட்டம் பெரும் பரபரப்பானது.

Categories

Tech |