மியான்மர் நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மியான்மர் நாட்டில் வசித்து வரும் தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்கள் இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஊடக விளம்பரங்கள் மூலம் போலி வேலை மோசடிகள் நடைபெறுகிறது. இந்த மோசடிகள் இந்திய வாலிபர்களை குறி வைத்து நடைபெறுகிறது. மேலும் தனியார் ஆட்சி சிறப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக வேலைக்காக தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இந்திய குடிமக்கள் வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு முன் வேலை தருவதாக கூறியுள்ள வெளிநாட்டு முதலாளிகள் மற்றும் முகவர்கள் நற்சான்றிதழ்கள் மற்றும் முன்னோடிகளை கட்டாயமாக சரி பார்க்க வேண்டும். மேலும் தென்கிழக்கு மியான்மரின் கயின் மாநிலத்தில் உள்ள மியாவாடி பகுதி தாய்லாந்தின் எல்லையாக உள்ளது. இந்த பகுதி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. இதனால் சில ஆயுத குழுக்கள் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மியான்மரில் உள்ள இந்திய தூதரகம் சமீபத்தில் சுமார் 60 பேரில் 30 இந்தியர்களை விட்டது. அவர்களில் பலர் மியாவடி பகுதியில் அடைக்கப்பட்டிருந்தனர் என அதில் கூறப்பட்டுள்ளது.