டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தற்கான சட்ட முன்வடிவை பேரவையில் வேளாண்மை அமைச்சர் துரைக்கண்ணு தாக்கல் செய்கிறார்.
கடந்த 9ம் தேதி காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து நேற்று கூடிய தமிழக அமைச்சரவை இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மேம்படுத்துதல் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படுகிறது.
வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கின்றார். சட்டமாக நிறைவேற்றியவுடன் இது மத்திய அரசுக்கு அனுப்புகிறது அல்லது குடியரசுத்தலைவரின் நேரடி ஒப்புதலுக்கு அனுப்பபடுகிறதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். பல ஆண்டுகளாக விவசாயிகள் , விவசாய கூட்டமைப்பினர் முன்வைத்து வந்த கோரிக்கை என்பது சற்று நேரத்தில் தமிழக சட்டசபையில் சட்டமாக இயற்றப்பட இருக்கின்றது.