Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ENGvIND : அசத்தல்..! கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி….. 3-0 என்ற கணக்கில் வாஷ்அவுட் செய்த இந்தியா ..!!

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று தொடரை 3-0என்ற கணக்கில் கைப்பற்றியது..

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில்  முதலில் 3 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 1 -2 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியிடம் தொடரை இழந்தது. இதனை தொடர்ந்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வென்று தொடரை வென்ற நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று லண்டனில் நடைபெற்றது..

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா இருவரும் களமிறங்கினர்.. இதில் ஷபாலி வர்மா 0 ரன்னில் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து வந்த யாஷ்டிகா பாட்டியா 0, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 4, ஹர்லின் 3 என அடுத்தடுத்து  ஆட்டமிழந்து வெளியேறியதால் இந்திய அணி 29 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து ஸ்மிருதி மந்தனாவுடன் தீப்தி சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுமையாக ஆடியது. மந்தனா (50 ரன்கள்) அரை சதம் அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த வீரர்களும்  சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க மறுமுனையில் தீப்சி சர்மா கடைசி வரை நின்றார்.. இறுதியில் இந்திய அணி 45.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தீப்தி சர்மா 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் கிராஸ் 4 விக்கெட்டுகளும், கெம்ப் மற்றும் சோஃபி எக்லெஸ்டோன் 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய எம்மா லாம்ப் 21, பேமவுண்ட் 8 என இருவரையும் ரேணுகா சிங் அவுட் செய்தார்.. அதனை தொடர்ந்து வந்த ஆலிஸ் கேப்ஸி 5, டேனி வியாட் 8,  சோஃபி எக்லெஸ்டோன் 0, கெம்ப் 5, கிராஸ் 10 என அனைவரும் சீரான இடைவெளியில் சொற்ப ஆட்டம் இழந்தனர். இதனால் 35.2 ஓவரில் 118/9 விக்கெட் இழந்திருந்தது இங்கிலாந்து மகளிர் அணி.அப்போது சார்லி டீனுடன், டேவிஸ் ஜோடி சேர்ந்தார்.

இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் நிலையில், கடைசியாக 47 ரன்கள் எடுத்திருந்த டீன் ரன் அவுட் ஆனார்.. டேவிஸ் 10 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். இதனால் 43.3 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.. இதனால் இந்திய அணி 3 -0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.. பொறுமையாக ஆடிவந்த சார்லி டீனை கடைசியாக மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார் தீப்தி சர்மா.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளும், ஜூலன் கோஸ்வாமி  சுவாமி மற்றும் ராஜேஸ்வரி கெயக்வாட் ஆகியோர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்..இதற்கிடையே இந்தப் போட்டியுடன் இந்தியாவின் மூத்த வேகப்பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |