பிரபல சீரியலில் இருந்து நடிகை ராதிகா ப்ரீத்தி வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பூவே உனக்காக சீரியல் மூலம் சின்ன திரையில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ராதிகா ப்ரீத்தி. இவர் தனது முதல் சீரியல் மூலமே ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த நிலையில் இவர் முன்னணி தொலைக்காட்சியில் தயாராகும் புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார்.
அது அக்கா-தங்கை கதைகளம் கொண்டது. இந்த சீரியலில் தங்கை கேரக்டரில் ராதிகா பிரித்தி நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். தங்கை கதாபாத்திரம் சீரியலின் ஹீரோயின் என கூறியுள்ளார்கள். இதை நம்பி ராதிகா பிரீத்தி சீரியலில் இணைந்துள்ளார். சில நாட்கள் படப்பிடிப்பில் இணைந்து நடித்த வந்துள்ளார். ஆனால் தங்கை கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என்பது நடிக்கும் பொழுது தெரியவந்துள்ளது. இதனால் அவர் சீரியலில் இருந்து விலகி விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.