Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3ஆவது டி20 போட்டி : தொடரை வெல்வது யார்?…. இந்தியா vs ஆஸ்திரேலியா இன்று மோதல்…!!

3ஆவது மற்றும் கடைசி போட்டியில் டீம் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இன்று மோதுகின்றன..

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அதனைத்தொடர்ந்து நடந்த 2ஆவது டி20 போட்டி நேற்று முன்தினம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. மைதானத்தின் ஈர்ப்பதம் காரணமாக 8 ஓவராக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது..

இந்நிலையில் ஐதராபாத்தில் நடைபெறும் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் டீம் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. தற்போது தொடர் 1-1 என சமநிலையில் இருப்பதால், இரு அணிகளும் வெற்றி பெற்று தொடரை வெல்ல ஆர்வமாக இருக்கின்றன. கடந்த டி20 போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா 20  பந்துகளில் 46 ரன்கள் விளாசி நல்ல பார்மில் இருக்கிறார்.. அதேபோல கே.எல் ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் அசத்தி வருகின்றனர்.. அதேநேரத்தில் வேகப்பந்து வீச்சாளர்களான  புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவரும் ரன்கள் அள்ளி கொடுக்காமல் கச்சிதமாக செயல்பட வேண்டியது அவசியம்..

மேலும் இந்திய அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா திரும்பியுள்ளது பலம் சேர்க்கிறது. பும்ரா டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படுவார் என்பதில் சந்தேகமில்லை. ரவீந்திர ஜடேஜா இல்லாத நிலையில் அக்சர் படேலின் ஃபார்ம் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக உள்ளது, மேலும் கடந்த 2 போட்டிகளில் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.. ஆனால் ஆசிய கோப்பையிலிருந்தே சாஹல் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படாததால் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ரிஷப் பண்ட்  மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் இரண்டாவது டி20 போட்டியில் விளையாடினர், ஆனால் அது 8 ஓவர் போட்டி என்பதால், ரோஹித் மீண்டும் இரு விக்கெட் கீப்பர்களுடன் செல்வாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் மேத்யூ வேட், கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் நல்ல பார்மில் அற்புதமாக ஆடி வருகின்றனர். ஆனால் மேக்ஸ்வெல், ஸ்டீவன் சுமித் ஆகியோரது ஆட்டம்  ஏமாற்றம் அளிக்கும் விதமாக உள்ளது. அவர்கள் பார்முக்கு வந்தால் அணி கூடுதல் வலுப்பெறும்.. மேலும் காயத்தால் கடந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் நாதன் எலிஸ் விளையாடாதது அந்த அணிக்கு பின்னடைவாக இருந்தது. எனவே அவர் இன்று நடக்கும் போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளது. அதேசமயம் வேகப்பந்து வீச்சில் பாட் கம்மின்ஸ், ஜேஸ் ஹேசில்வுட், டேனியல் சாம்ஸ் ஆகியோரும்  சூப்பராக ஆட வேண்டியது முக்கியம் . சுழற்பந்து வீச்சாளர் ஆடம் சாம்பா கடந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி நல்ல பார்மில் இருப்பது பலம் சேர்க்கிறது.

இந்தியா vs ஆஸ்திரேலியா 3வது டி20 போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் (செப்டம்பர் 25) இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்க உள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

உத்தேச இந்திய அணி : 

கேஎல் ராகுல், ரோகித் சர்மா (கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், ஜஸ்பிரித் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார்.

உத்தேச ஆஸ்திரேலிய அணி :

ஆரோன் பிஞ்ச் (கே), கேமரூன் கிரீன், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், மேத்யூ வேட் (வி.கே), டேனியல் சாம்ஸ், சீன் அபோட், பாட் கம்மின்ஸ், ஆடம் சாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

 

 

 

Categories

Tech |