தமிழகத்தில் 1,02,000 கி.மீ தூரத்திற்கு சாலைகள் பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது அமைச்சர் எஸ். பி. வேலுமணி பேரவையில் கூறியுள்ளார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 4ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சாலை வசதி குறித்த விவாதத்தின் போது சிறப்பு சாலை திட்டம் மூலம் ஊராட்சி நகர்ப்புற சாலைகள் அதிகமாக கவனிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் எஸ். பி. வேலுமணி கூறியுள்ளார்.
1,02,000 கி.மீ தூரத்திற்கு சாலைகள் பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. 48, 000 கி. மீ தொலைவிற்கு புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் லட்சக்கணக்கான கிலோ மீட்டர் தூர சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் சாலைகள் புதுப்பிக்கப்பட்ட பின்னரே புதிய சாலைகள் போடப்படும் என்றும் ஒரே நேரத்தில் பல சாலைகளை பராமரிக்கும் பணி நடைபெறாது என்றும் தகவல் அளித்துள்ளார்.