Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

வாட்ஸ் ஆப், ஜூம் கால் செய்ய இனி இது தேவை…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே செல்போன்கள் பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் மூலமாக ஆன்லைன் கால், மெசேஜ் உள்ளிட்ட சேவைகளை பெற்று வருகிறார்கள். ஆன்லைன் கால் மற்றும் மெசேஜ் செய்திகளை வழங்கும் whatsapp, ஜூம், கூகுள் டியோ போன்ற ஓவர் தி டாப் பிளேயர்கள் இந்தியாவில் செயல்படுவதற்கு உரிமங்கள் தேவைப்படும் தொலைதொடர்பு சேவைகளின் வரம்பிற்குள் வரலாம். மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் மற்ற இடங்களில் லேசான தொடுதல் கட்டுப்பாடு இருக்கும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய டெலிகிராம் டெலிகாம் மசோதாவில் உள்ள நிபந்தனைகள் என்னவென்றால் இந்த தொலைதொடர்பு சேவைகளை பெறுவதற்கு பயனர் தவறான அடையாளத்தை கொடுத்தால் ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும். தொலைதொடர்பு சேவை வழங்குனர்களுக்கு புதிய விதிக்கு மாற்றாக விருப்பம் வழங்கப்படும். பூஜ்ஜியம் முதல் அதிகபட்சம் ஐந்து கோடி வரை அபராதம் விதிக்கப்படும். தொலைதொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குனர்களின் கட்டணங்கள் மற்றும் அபராதங்களை தள்ளுபடி செய்யும் விதியை அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு நிறுவனம் திவாலான நிலைக்கு சென்றால் சேவையின் தொடர்ச்சியில் அரசாங்கம் கவனம் செலுத்தும்.

Categories

Tech |