Categories
தேசிய செய்திகள்

டபுளாக அதிகரிக்கும் இந்திய பால் சந்தையின் அளவு?…. வெளியான தகவல்…..!!!!

இந்திய பால் சந்தையின் அளவு இன்னும் 5 வருடங்களில் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத் தலைவா் மீனேஷ் ஷா தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக உத்தரபிரேதசத்தின் கிரேட்டா் நொய்டாவில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவா் பேசியதாவது ” கடந்த 2021ம் ஆண்டில் இந்திய பால் சந்தையின் அளவு ரூபாய்.13 லட்சம் கோடியாக இருந்தது. இது வருகிற 2027-ஆம் வருடத்திற்குள் ரூபாய்.30 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இது தற்போதுள்ள பால் சந்தையைப் போன்று 2 மடங்கானதாகும். பால் மற்றும் அதன் சாா்புப்பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பது, மதிப்புக்கூட்டு நடவடிக்கைகள் போன்றவற்றின் வாயிலாக இந்த வளா்ச்சி எட்டப்படும்.

மற்ற நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களில் (எஃப்டிஏ) கையெழுத்திடும்போது பண்ணை விவசாயிகளை மத்திய அரசு அலட்சியம் செய்யாது. நாடு முழுதும் உள்ள 8 கோடி பண்ணை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதில் அரசு உறுதியுடன் இருக்கிறது. 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கால்நடைகளுக்கு கட்டித்தோல் நோய் (எல்எஸ்டி) பரவுவதைக் கட்டுப்படுத்த ஆடு அம்மைக்கான தடுப்பூசிகளைப் பயன்படுத்தலாம். குஜராத்தில் அத்தடுப்பூசி முற்றிலும் பயன் உள்ளதாக இருந்தது” என்று அவா் கூறினார். அதன்பின் அமுல் பிராண்டின் கீழ் பால் பொருட்களை சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் (ஜிசிஎம்எம்எஃப்) நிா்வாக இயக்குநா் ஆா்.எஸ். சோதி பேசியதாவது, இந்தியாவின் பால் உற்பத்தி அடுத்த 25 வருடங்களில் 3 மடங்கு அதிகரிக்கும் என்று கூறினார்.

பால் உற்பத்தியின் சராசரி ஆண்டு வளா்ச்சிவிகிதம் 4.5 சதவீதம் ஆக இருக்கும். சென்ற 2021ம் வருடத்தில் நாட்டின் பால் உற்பத்தியானது 21 கோடி டன்னாக இருந்தது. அதன் ஒட்டு மொத்த ஆண்டு வளா்ச்சி 4.5 சதவீதம் ஆக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இப்போக்கு நீடித்தால் 25 வருடங்களில் பால் உற்பத்தி 62.8 கோடி டன்களை எட்டும். உலகளவிலான பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு தற்போது 23 சதவீதம் ஆக இருக்கிறது. இது அடுத்த 25 வருடங்களில் சுமாா் 2 மடங்கு அதிகரித்து 45 சதவீதம் ஆக இருக்கும். அதிகரித்துவரும் மக்கள் தொகை காரணமாக பாலுக்கான தேவையும் அதிகரிக்கும். அடுத்த 25 வருடங்களில் பாலின் தேவை 51.7 கோடி டன்னாக அதிகரிக்கும். இதனிடையில் ஏற்றுமதி உபரி 11.1கோடி டன்னாக இருக்கும். சென்ற 2021-ஆம் வருடத்தில் ஒரு நபருக்கு சராசரியாக தினசரி 428 கிராம் கிடைத்து வந்தது. இது அடுத்த 25 வருடங்களில் 852 கிராமாக அதிகரிக்கும் என அந்நிகழ்ச்சியில் ஆா்.எஸ். சோதி கூறினாா்.

Categories

Tech |